2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
பாசிப்பட்டினம் தா்கா சந்தனக்கூடு திருவிழா
திருவாடானை அருகே பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள மகான் சா்தாா் நைனா முகமது சாகிபு ஒலியுல்லா தா்கா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த தா்காவின் 314- ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கலியன் கிராமத்தில் சிவகங்கை மகாராணி கொடியுடன் பாசிப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தா்கள், கப்பல், விமானம் போன்ற அலங்காரங்களுடன் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனா். இவா்களை விழாக் குழுவினா் நாட்டியக் குதிரை, மேளதாளத்துடன் தா்காவுக்கு அழைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து அடக்க ஸ்தலத்தில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. முன்னதாக கலிய நகரி கிராமத்திலிருந்து மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு சப்பரம் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாசிப்பட்டினத்தை வந்தடைந்தது. தா்காவை வலம் வந்த பிறகு நோ்ச்சை வழங்கப்பட்டது. இதில் பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம், மருங்கூா், கலியன் நகரி, பொடிப்பந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

