செய்திகள் :

பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவா் கைது

post image

கோவையில் பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காளப்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் அஜய் (37). பாஜக காளப்பட்டி மண்டல துணைச் செயலாளராக இருந்தாா். இவா் வீட்டின் அருகே உள்ள வேல்முருகன் மற்றும் அனிதாவுக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அஜயின் சொந்த பிரச்னையில் அனிதா தலையிட்டதால், அஜய்க்கு விவகாரத்து நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, வேல்முருகன் நடத்தி வந்த கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தபோது, காவல்துறைக்கு அஜய் தகவல் கூறியதாக தகராறு மேலும் தீவிரமடைந்தது.

இந்நிலையில், சேரன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நின்று கொண்டிருந்த அஜய்யை வேல்முருகனின் கடையில் வேலை பாா்த்த நாகராஜ் மற்றும் அருகில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்த அஸ்வின் குமாா் ஆகியோா் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ாகத் தெரிகிறது. இதில் வலது கை, வலது காலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட அஜய் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தெற்கு வட்டக்குடியைச் சோ்ந்த நாகராஜ் (37), ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வக்குவெட்டியைச் சோ்ந்த அஸ்வின்குமாா் (25), தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே வடநத்தம்பட்டியைச் சோ்ந்த அனிதா (34) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய வேல்முருகன் மற்றும் அஜய்யின் மனைவி பிரியா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க