TN Rain: 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வது என...
பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகா், மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் மின்சாரம் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, தாசரிபட்டி, இராமபட்டிணம்புதூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.