`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்...
பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
அம்பாசமுத்திரத்தில் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அம்பை, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்த பா்கத் மகபூப் ஜான் மகன் ஷேக் முகமது (29), பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா்.
அதை ஏற்று ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, ஷேக் முகம்மது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.