'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மதியழகன் (23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து இவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி ஜி.சரண் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மதியழகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.