கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!
பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மழையைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை பாதையின் பஹல்காம் அச்சில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது, ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.
ஜம்முவிலிருந்து தெற்கு காஷ்மீர் இமயலையில் உள்ள குகைக் கோயிலுக்கு புதிய குழுவினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்த நிலையில், பால்டால் மற்றும் பஹல்காம் வழித்தடங்களில் யாத்திரை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதனிடையே பால்தால் பாதையிலிருந்து இன்று காலை யாத்திரை மீண்டும் தொடங்கியது
ஜூலை 31 அன்று ஜம்முவின் பகவதி நகரிலிருந்து பால்தால் மற்றும் நுன்வானில் உள்ள அடிப்படை முகாம்களை நோக்கி எந்த வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டதாக ஆணையர் ரமேஷ் குமார் கூறினார்.
பஹல்காம், பால்தால் இரட்டை அடிப்படை முகாம்களில் பயணம் செய்வதற்காக பக்தர்கள் பகவதி நகர் அடிப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிலிருந்து யாத்திரை இடைநிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஜூலை 17 அன்று, காஷ்மீரில் உள்ள இரட்டை அடிவார முகாம்களில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது.
ஜூலை 3 ஆம் தேதி பள்ளத்தாக்கிலிருந்து 38 நாள் யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் உள்ள சிவபெருமானின் பனி லிங்கத்தை இதுவரை 3.93 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்தாண்டு 5.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசித்தனர். ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9 ஆம் தேதி யாத்திரை நிறைவடைகின்றது.