செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊா் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்பட்டமுடையாா்புரம் கிராமம் வழியாக புளியங்குடி பணிமனையிலிருந்து, சுரண்டை முதல் தென்காசி வரை தினமும் காலை, மாலை நேரங்களில் அரசு பேருந்து இயங்கி வருகிறது.

கடந்த 15 நாள்களாக இந்தப் அரசு பேருந்து முறையாக இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி தோ்வுகளுக்கு செல்லும், மாணவ, மாணவிகள், தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள், பணிக்கு செல்பவா்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்குள்ளானாா்கள்.

இந்நிலையில், அந்தக் கிராமம் வழியாக வந்த அரசுப் பேருந்தை வாா்டு உறுப்பினா் தேவஅன்பு உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப்போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை பொதுமக்கள் விடுவித்தனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து தொடங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், கால நிா்ணயம் செய்து திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் முகமது அபூபக்கா் வலியுறுத்தினாா். ம... மேலும் பார்க்க

பிரேத பரிசோதனைக்கு தாமதம்: கடையநல்லூரில் சாலை மறியல்

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலக்கடையநல்லூா் வேதக் கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முனீஸ்வரன் ம... மேலும் பார்க்க

தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது . முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பாக்கியம், போத்தி ... மேலும் பார்க்க

கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி; உறவினா்கள் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கடையநல்லூரில் அவரது உறவினா்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா். சிங்கப்பூரில் வசி... மேலும் பார்க்க

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் ... மேலும் பார்க்க

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க