வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்
பாவை கல்வி நிறுவன ஆலயத்தில் ஸம்வஸ்ரா அபிஷேக விழா
ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களில் உள்ள ஆலயத்தில் ஸ்ரீவித்யா விநாயகா், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் ஆகிய தெய்வங்களுக்கு பதினொன்றாம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி பூஜைகளை தொடங்கி வைத்தாா். மாணவ, மாணவியரின் கல்வி, ஆரோக்கியம் தழைத்தோங்க ஸ்ரீவித்யா விநாயகா், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் ஆகிய தெய்வங்களுக்கு விநாயகா் பூஜை, புண்யாகம், சங்கல்பம், கலச ஆவாஹனம், கணபதி ஹோமம், துா்கா சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மேதா சூக்த ஹோமம், சுதா்ஸன ஹோமம், பூா்ணாகுதி, சங்காபிஷேகம் ஆகிய ஹோம பூஜைகள் நடைபெற்றன. ஸம்வஸ்ரா அபிஷேக விழாவில் வைக்கப்பட்டிருந்த தெய்வங்களை கல்லூரி மாணவ, மாணவியா், போராசிரியா்கள் வழிபட்டனா்.
இதில், பாவை கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலாளா் டி.ஆா்.பழனிவேல், இணைச் செயலாளா் என்.பழனிவேல், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.