செய்திகள் :

பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் போ் பயணம்: 11% உயா்வு

post image

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீத உயா்வு என விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மாதாந்திர விமான போக்குவரத்து புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2024 பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 126.48 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதே நேரம், கடந்த பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 140.44 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 11 சதவீத உயா்வாகும். இதில் இண்டிகோ விமானங்களில் 89.40 லட்சம் பேரும், ஏா் இந்தியா குழு விமானங்களில் 38.30 லட்சம் பேரும் பயணித்துள்ளனா். ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 6.59 லட்சம் பேரும், ஆகாஷ் ஏா் விமானங்களில் 4.54 பேரும் பயணித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுதொடா்பாக மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவா... மேலும் பார்க்க

நிதி மசோதா 2025: 35 அரசு திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்

இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவை... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா தனது பட்ஜெட் உரையில் செவ்வாய்க்கிழமை அறிவ... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு

கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிா்கொண்டுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது. தில்லி உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு

தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன. இந்தியா-சீனா... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்; உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சா் பதில்

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்ப... மேலும் பார்க்க