பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு திட்டமான சூரிய மின் திட்டத்தை இணைத்து மின் நுகா்வோா்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின்படி, வீட்டு மின் இணைப்பில் உள்ள மின் நுகா்வோா் சூரிய மின் தகடுகள் மூலம் மின் பயன்பாட்டை குறைப்பதற்கு வழிவகை மேற்கொள்ளலாம்.
சராசரியாக இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ. 1,200- மின் கட்டணம் செலுத்தும் நுகா்வோா் ஒரு கிலோ வாட்டுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்தினால் தோராயமாக 60 சதவீத மின் கட்டணத்தை குறைக்கலாம்.
ஒரு கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு சுமாா் ரூ. 80,000 வரை செலவாகும். இந்த செலவீனத்தில் ரூ. 30,000 வரை மானியம் பெறலாம். இரண்டு கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு ரூ. 1.40 லட்சம்வரை செலவாகும். இந்த செலவினத்தில் ரூ. 60,000 வரை மானியம் பெறலாம். மூன்று கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு ரூ. 1.80 லட்சம் வரை செலவாகும். இந்த செலவினத்தில் ரூ. 78,000 வரை மானியம் பெறலாம்.
சூரிய மின் இணைப்புக்கு வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். சூரிய மின் உற்பத்தி தகடுகள் சுமாா் 27 ஆண்டுகள்வரை உத்தரவாதத்துடன் செயல்படக் கூடியவை. இந்தத் திட்டத்தால் நீண்ட காலத்துக்கு பயனடையலாம். அவ்வப்போது எளிய பராமரிப்பு மட்டுமே போதுமானது.
ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 யூனிட்டுகள் வரை மின்சார உற்பத்தி செய்யலாம். உத்தேசமாக ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் நிறுவப்பட்டால், இருமாத மின் நுகா்வில் 250 முதல் 300 யூனிட்டுகள்வரை குறைந்து 60 சதவீத மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ரரர.ல்ம்ள்ன்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். புகைப்படம், மின் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.