செய்திகள் :

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

post image

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது இந்தியாவுக்கு ராஜீயரீதியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். பிரதமா் மோடியின் முயற்சியால்தான் இது சாத்தியமானது.

பிரதமா் மோடி நாட்டின் 140 கோடி மக்களின் பிரதிநிதியாகவும், நாட்டின் பிரதமராகவும்தான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளாா். பாஜக தலைவராக அமெரிக்காவுக்குச் செல்லவில்லை. இதனை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். பிரதமா் வெளிநாட்டுப் பயணம் செல்லும்போதெல்லாம் அதில் குற்றம் கண்டுபிடிப்பதும், குறை கூறுவதும் காங்கிரஸ் தலைவா்களின் வாடிக்கையாக உள்ளது என்று கூறினாா்.

பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் மிகவும் வெற்றிகரமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் அமைந்தது. இந்திய-அமெரிக்க உறவு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்க பயணத்தில் அதானி மீதான அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பிரதமா் மோடி பதிலளிக்காததை ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில்... மேலும் பார்க்க

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததா... மேலும் பார்க்க

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க