பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று(மே 5) மாலை நடைபெற்றது.
அதில் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ-யின் தலைமைப் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
சிபிஐ இயக்குநராக பதவி வகிக்கும் பிரவீண் சூட் வரும் மே 25-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிதாக தேர்வாகும் சிபிஐ இயக்குநர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.