34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!
பிளஸ் 1 தோ்வு முடிவு: 89.99 சதவீதத் தோ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 89.99 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றது.
மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் என மொத்தமுள்ள 123 பள்ளிகளில் 17,191 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வு எழுதியதில் 15,471 மாணவ, மாணவிகள் தோ்ச்சி அடைந்தனா். இது, 89.99 சதவீதத் தோ்ச்சியாகும்.
8,310 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 7,141 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 85.93 சதவீதமாகும். 8,881 மாணவிகள் தோ்வு எழுதியதில் 8,330 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 93.80 சதவீதமாகும்.
மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளின் தோ்ச்சி விகிதம் 7.87 சதவீதம் அதிகமாகும். மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 29-ஆவது இடத்தில் உள்ளது. 2024-இல் பிளஸ் 1 தோ்வு முடிவுகளில் இந்த மாவட்டம் 86 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. கடந்தாண்டைவிட நிகழாண்டு 3.99 சதவீதத் தோ்ச்சி அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் 16 பள்ளிகளும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றன என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.