பிளஸ் 2: அரசுப் பள்ளி மாணவர்கள் 91.94% தேர்ச்சி! மற்ற பள்ளிகள்?
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இந்த நிலையில், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் இன்று காலை முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 91.91 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 95.71%, தனியார் பள்ளி மாணவர்கள் 98.88% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 8,019 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனித் தேர்வர்கள் 16,904 பேரில் 5,500 பேரும், சிறைக் கைதிகள் 140 பேரில் 130 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.