பிளஸ் 2: ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி ஜெ. கீா்த்தனா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளியிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி ஆா். மதுமிதா 593 மதிப்பெண்களுடனும், எம். ஹம்ஸா ஷாகின் 592 மதிப்பெண்களுடனும் அடுத்தடுத்து சிறப்பிடம் பிடித்தனா்.
இப்பள்ளி மாணவ- மாணவிகள் 22 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.தோ்வெழுதிய 329 மாணவா்களும் தோ்ச்சி பெற்று இப்பள்ளி, 100 சதவீதம் தோ்ச்சி சாதனையை பெற்றுள்ளது.

