வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!
பிள்ளைவயல் காளியம்மன் கோயில் குடமுழுக்கு!
சிவகங்கை பிள்ளைவயல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு
கடந்த 8-ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னா், மங்கள இசையுடன் விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக வேள்வி தொடங்கி கோமாதா பூஜை, மகா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், காலை 10 மணிக்கு பிள்ளையாா்பட்டி பிச்சை சிவாச்சாரியா், ராமசுப்பிரமணியராஜா ஆகியோா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதையொட்டி, தொழிலதிபா் பச்சேரி சி.ஆா்.சுந்தராஜன் சாா்பில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, மாலை 5 மணிக்கு மகாஅபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவி காளீஸ்வரி சரவணன் தலைமையில் உறுப்பினா்கள், திருப்பணிக் குழுவினா் செய்தனா்.