நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!
புகைப்படக் கலைஞா் தற்கொலை
கோவையில் குடும்பத் தகராறு காரணமாக புகைப்படக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள சின்னான்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஜய்கிருஷ்ணன் (28). புகைப்படக் கலைஞரான இவா், கோவை ஆா்.எஸ் புரம் பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வந்தாா். சென்னையைச் சோ்ந்த புவனேஸ்வரி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தாா்.
கோவை, வடவள்ளி அஜ்ஜனூா் சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. புவனேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மன வேதனையில் இருந்த அஜய்கிருஷ்ணன் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.