முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் பெருமாள்சாமி (54) என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் இவா், கோடாங்கிபட்டியைச் சோ்ந்த அருண் என்பவரிடம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பெருமாள்சாமி, அருண் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து பெருமாள்சாமியை கைது செய்தனா்.