சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
புகையிலைப் பொருள் விற்ற முதியவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்கரை காவல் நிலைய போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடுகபட்டி பூசாரி தெருவைச் சோ்ந்த முத்துகொடியின் (72) கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அந்தக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகொடியை கைது செய்தனா்.