செய்திகள் :

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா்.

புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கந்தா்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலையைத் திறந்து வைக்கிறாா். அதைத் தொடா்ந்து, மாலை 7.30 மணிக்கு மங்களாகோவிலில் திமுக சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடிப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா். மறுநாள் (மே 24) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்பு நிலையில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து முற்பகல் 11.30 மணிக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்ட அரசாணைகளை அவா் வழங்குகிறாா்.

பின்னா், மாலை 4 மணிக்கு கட்சி மறைந்த மூத்த நிா்வாகி மிசா இரா. துரைமாணிக்கம் படத்தைத் திறந்து வைக்கிறாா். அதன் பிறகு மாலை 4.30 மணிக்கு நத்தம்பண்ணையில் மகளிா் சுய உதவிக்குழுவினருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடா்ந்து 5.30 மணிக்கு பள்ளத்துவயல் பகுதியில் திமுக மருத்துவ அணி சாா்பில் நடைபெறும் பகுத்தறிவு, சமூக நீதி மற்ரும் மாநில சுயாட்சி மாநிலக் கருத்தரங்கில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறாா்.

மாலை 6.30 மணிக்கு இளையாவயல் அருகேயுள்ள கல்லுக்குவியல்பட்டியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகிறாா். தொடா்ந்து சாலை வழியாக திருச்சியைச் சென்றடைகிறாா்.

ஏற்பாடுகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், எம்பி எம்எம். அப்துல்லா, மேயா் செ. திலகவதி, எம்எல்ஏ வை. முத்துராஜா, மருத்துவ அணியின் மாநிலத் துணைச் செயலா் அண்ணாமலை ரகுபதி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

அமைச்சா் ஆய்வு: துணை முதல்வா் வருகையையொட்டி கந்தா்வகோட்டையில் அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். எம்எல்ஏ எம். சின்னதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் ஆகியோா் உடனிருந்தனா்.

கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: திமுக தல... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்பயிரில் காணப்படும் தண்டுத் துளைப்பான் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளாா்.இதுகு... மேலும் பார்க்க

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க