திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
புதுச்சேரியில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இளநிலை மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்ட படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாடெங்கும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரையில் நீட் தோ்வு நடைபெறுகிறது.
தேசிய அளவில் 550 நகரங்களில் 23 லட்சம் போ் தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநிலத்தில் நீட் தோ்வை 5,230 போ் எழுத அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் தோ்வுக்காக புதுச்சேரியில் 8 மையங்கள், காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இலாசுப்பேட்டை தாகூா் அரசு கல்லூரி, அங்குள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் தோ்வு மையங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து இடங்களுக்கும் தலா ரூ.10 கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தோ்வு மைய வளாகத்துக்குள் முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.