அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசா...
புதுவையில் மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்குத் தீா்வு!
புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் ஒவ்வோரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்கள் மன்றம் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளா் அளவிலான காவல் நிலையங்களில் மக்கள் குறை தீா்க்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது.
அதன்படி, பெரியகடை காவல் நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், மேட்டுப்பாளையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமிசௌசன்யா ஆகியோா் தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது.
இணையதள குற்றப்பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கே.திரிபாதி, காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் மனுக்களைப் பெற்றனா்.
மக்கள் மன்றத்தில் மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 26 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மக்கள் மன்றத்தில் 43 மகளிா் உள்பட 204 போ் பங்கேற்று குறைகளைத் தெரிவித்தனா்.
மக்கள் மன்றத்தில் ஏற்கெனவே அளித்த புகாா்களின் நிலை மற்றும் நடவடிக்கை குறித்து காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்களிடம் உயரதிகாரிகள் கேட்டறிந்தனா்.