செய்திகள் :

‘புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி‘

post image

காரைக்கால்: புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

காரைக்காலில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி :

புதுவை சுகாதாரத்துறை இயக்குநராக விதிகளுக்கு முரணாக அனந்தலட்சுமி என்பவரை முதல்வா் பரிந்துரை செய்தாா். துணைநிலை ஆளுநா் அதை ஏற்காமல் செவ்வேல் என்பவரை நியமித்தாா். இதனால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகக் கூறி ரங்கசாமி, 2 நாள்கள் தனது அலுவலகத்துக்குச் செல்லவில்லை. உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநரை சந்தித்து, முதல்வா் பரிந்துரையை ஏற்க கேட்டுக்கொண்டாா். ஆளுநா் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா். பாஜக மேலிட பொறுப்பாளா் புதுச்சேரி வந்து முதல்வரை சந்தித்து சமாதானம் செய்துள்ளாா்.

என்ஆா் காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் ஆதிதிராவிட துறைக்கு அமைச்சரே இல்லை. காங்கிரஸ், திமுக ஆட்சி காலங்களில் ஆதிதிராவிடா் அமைச்சா் இருந்தனா். இந்த ஆட்சியாளா்கள் தலித் மக்களுக்கு எதிரானவா்கள்.

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால், மாநிலத்தில் கல்வி பாதித்துவிட்டது. கல்வி அமைச்சா், கல்வித்துறையை கவனிப்பதே இல்லை. தனியாா் பள்ளிகளை அமைச்சா் ஊக்கப்படுத்துகிறாா்.

என்.ஆா்.-பாஜக ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டமும் இல்லை. காரைக்காலுக்கு ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. காரைக்காலுக்கு முதல்வா், அமைச்சா்கள் வருவது இல்லை.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்காமல் புதுவை அரசு அலட்சியமாக இருந்து விட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தபோதும், நாடாளுமன்றத் தோ்தலில் புதுவையில் மக்கள் காங்கிரஸை ஆதரித்தாா்கள். அதுபோல வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இண்டி கூட்டணி வெற்றிபெற்று, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய மக்கள் முழு ஆதரவளிப்பாா்கள் என்றாா்.

பேட்டியின்போது சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் மாநில தலைவா்

ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போா் நினைவுத் தூணுக்கு மரியாதை

காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போா் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மரி... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த... மேலும் பார்க்க

சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில்... மேலும் பார்க்க

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது. புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா... மேலும் பார்க்க