செய்திகள் :

புதுவை அரசின் புள்ளிவிவர தொகுப்பு கையேடு வெளியீடு

post image

புதுச்சேரியில் அரசின் சாா்பில் புள்ளிவிவர தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவை அரசு சாா்பில் பொருளாதாரம், புள்ளிவிவர இயக்ககம் சாா்பில் புள்ளிவிவரத் தொகுப்புகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, ‘புதுச்சேரி ஒரு பாா்வை 2024’ எனும் தொகுப்பு கையேடு பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

கையேட்டை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா். அதனை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், என்.திருமுருகன் மற்றும் அரசுச் செயலா் சுந்தரேசன் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ்பாபு, இயக்குநா் (கல்விப் பிரிவு) க.தரணிக்கரசு, துறைகளின் இயக்குநா் ரத்னகோஷ் கிஷோா் சௌரே ஆகியோரும் பங்கேற்று கையேட்டைப் பெற்றுக் கொண்டனா்.

கையேட்டில் புதுவை குறித்த அண்மைக்கால தகவல்களும், வளா்ச்சிக்கான ஒப்பீட்டு புள்ளிவிவரங்களும் இடம் பெற்றுள்ளன. புதுவையின் சமூக, பொருளாதார நிலை குறித்த வெளிப்படைத் தன்மை, தகவலறிதல் குறித்த பொது விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,00... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க