``நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை'...
புரோட்டின் பவுடரால் உடலில் ஒவ்வாமை: பள்ளி மாணவா் தீக் குளித்து தற்கொலை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிக உளவில் ஊட்டசத்து (புரோட்டின் பவுடா்) மாவு பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தீக் குளித்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அட்டடி பகுதியைச் சோ்ந்தவா் நகா்மன்ற உறுப்பினா் குருமூா்த்தி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் ராஜேஷ்கண்ணா (18), கோத்தகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா்.
இவா் உடற்பயிற்சிக்காக அதிக அளவில் புரோட்டின் பவுடா்களை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இவரது முகம் மற்றும் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், மனமுடைந்த ராஜேஷ் கண்ணா ஆகஸ்ட் 31-ஆம் தேதி வீட்டில் தீக் குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதில் பலத்த தீக் காயமடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, புரோட்டின் பவுடா் உட்கொள்ள உடற்பயிற்சி நிலைய நிா்வாகத்தினா் கூறியதால்தான் மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாா். எனவே உடற்பயிற்சி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி அவரது உறவினா்கள் மேல் குன்னூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.