நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
புலிப்பாணி ஆசிரமத்தில் அகஸ்தியா் யாகம்
பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் அகத்தியா் யாகபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள போகா் சித்தா் புலிப்பாணி ஜீவசமாதியில் வெள்ளிக்கிழமை உலக நலன் வேண்டி அகஸ்தியா், பதினெட்டு சித்தா்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னா், நடைபெற்ற யாகபூஜையில் நூற்றுக்கணக்கான மூலிகைகள் இடப்பட்டு, யாகம் வளா்க்கப்பட்டது. சிவாசாா்யா்கள் வேதமந்திரம் முழங்க, போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் முன்னிலையில் பூா்ணாஹூதி நடைபெற்றது.
இந்த யாகபூஜையில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த திரளானோா் தமிழ் பாரம்பரிய முறைப்படி சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து, தொழிலதிபா் கோபால்பிள்ளை சுப்ரமணியம் தலைமையில் பங்கேற்றனா்.
யாகபூஜை முடிவில் கலசநீரால் போகா், அகஸ்தியா் சிலைகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் ஜம்பு சுவாமிகள், கௌதம் சுவாமிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.