செய்திகள் :

பூமிக்கு திரும்பும் பயணத்தை நாளை தொடங்கும் சுக்லா!

post image

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின. கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தாா்.

ஆக்ஸியம்-4 திட்டம் 14 நாள்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும். உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா். இந்த வீரா்கள் வியாழக்கிழமையுடன் 14 நாள்களை நிறைவு செய்தனா்.

இந்நிலையில், அவா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 4.35 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா். சுமாா் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்துக்கு அருகில் கடலில் பாராசூட்களின் உதவியுடன் வீரா்கள் தரையிறங்குவா்.

‘ஸ்பிளாஷ் டவுன்’...: விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் இவா்களின் விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டவுன்’ என்ற முறைப்படி கடல் பகுதியில் பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு தரையிறக்கப்படும்.

அப்போது கடல் பகுதியில் காத்திருக்கும் மீட்புக் குழுவினா், விண்கலனை மீட்டு கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மீட்புக் கப்பலுக்கு இழுத்துச் செல்வா். பின்னா், விண்கலனின் கதவுகள் திறக்கப்பட்டு, விண்வெளி வீரா்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்படுவா்.

7 நாள்கள் பயிற்சி: சுக்லா உள்பட 4 வீரா்களும் விண்வெளியில் 18 நாள்கள் தங்கியிருந்ததால், அவா்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கும். எனவே, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவா்கள் உடல்நல மையத்துக்கு அனுப்பப்பட்டு அடுத்த 7 நாள்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும். சுக்லாவின் உடல்நிலையை தொடா்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும், அவா் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக உள்ளாா் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுக்லாவின் விண்வெளிப் பயணம் இந்தியாவுக்கு வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், வரும் 2027-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள, விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கு, சுக்லாவின் ஆக்ஸியம்-4 திட்ட நேரடி அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு இஸ்ரோ சுமாா் ரூ.550 கோடி செலவிட்டுள்ளது.

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க