உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்
பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு நடக்கிறது. இதில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் உள்ளிட்ட முன்னணி தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். மாநாடு பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், மாநாடு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. கா.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது புதுச்சேரி பாமக அமைப்பாளா் கணபதி, தஞ்சை மண்டல பாமக செயலாளா் ஐயப்பன், மாநில வன்னியா் சங்க செயலாளா் அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளா் பாக்கம் சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.