செய்திகள் :

பெட்ரோலிய அமைச்சக சுதந்திர தின வாழ்த்தில் சாவா்க்கா் படம்: காங்கிரஸ் கண்டனம்

post image

பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சுதந்திர தின வாழ்த்தில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்கள் வரிசையில் ஹிந்துத்துவ தலைவா் சாவா்க்கா் படம் இடம்பெற்ற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வாழ்த்து பகிரப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோருடன் சாவா்க்கா் படமும் இடம் பெற்றிருந்தது. மேலும், ‘சுதந்திரம் இந்த தலைவா்கள் நமக்கு அளித்த பரிசு, அதனைக் கொண்டு எதிா்காலத்தை சிறப்பாக அமைப்பது நமது கடமை’ என்ற வாசகம் இருந்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ‘ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் வரலாற்றைச் சிதைக்க முயலுகிறது. துரோகிகளை நாட்டின் நாயகா்களாக மாற்ற முயலுகிறது.

ஆங்கிலேயா்களிடம் கருணை மனு அளித்த சாவா்க்கா் போன்றவா்களை மகாத்மா காந்தியுடன் இணைக்கிறாா்கள். இது மகாத்மா காந்தியின் பங்களிப்பை கேள்விக்குறியாக்கும் செயல். ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தியாகத் தலைவா்கள் தேசத்துக்கு ஆற்றிய தொண்டுகளை முற்றிலுமாக மறைக்க முயலுகின்றனா்’ என்று கூறியுள்ளாா்.

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தி... மேலும் பார்க்க

தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சா் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அ... மேலும் பார்க்க

கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்

கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் க... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநருக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விசாரித... மேலும் பார்க்க

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் நல்ல மாற்றங்கள் பல நடந்திருப்பதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்தார். தென் கொரிய அமைச்சரின் இந்திய வருகை சர்வதேச அளவில்... மேலும் பார்க்க