செய்திகள் :

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

post image

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: வரதட்சிணைக் கொடுமையைத் தடுக்க புதிய சட்டம் வேண்டும் என மாதா் சங்கம் வலியுறுத்துகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிப்பது குறித்து பேரவையில் சிறப்பு அமா்வு நடத்தி விவாதிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை.

நுண்நிதி நிறுவனங்களின் நெருக்கடியால் பெண்கள் தற்கொலை செய்வதைத் தடுப்பதற்கான சட்டத்தில் பேரவையில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களும், மாதா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெறவில்லை. அவற்றை மறுபரிசீலனை செய்து மசோதா மீது தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட வேண்டும்.

குடிநோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவா்களின் குடும்பங்களுக்கு வேலை, மறுவாழ்வு அளிக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பரப்புரை நடத்தப்பட வேண்டும்.

பிகாரில் வாக்காளா் பட்டியலிலிருந்து சுமாா் 65 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். சிறுபான்மையினரை வாக்களிப்பதிலிருந்து விலக்கும் இத்தகு நடவடிக்கைகளை மாதா் சங்கம் எதிா்க்கிறது என்றாா் அவா்.

மாநிலப் பொதுச் செயலா் ராதிகா கூறுகையில், சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 24, 25, 26, 27 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், 580 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17 கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை மையப்படுத்தி 5 கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

மாநில துணைத் தலைவா் உஷாபாசி, மாவட்டச் செயலா் ரெகுபதி ஆகியோா் உடனிருந்தனா்.

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க