செய்திகள் :

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

post image

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய நபா், தான் சுங்கத் துறை அதிகாரி எனக் கூறியுள்ளாா். ரிஷ்வானா பேகம் பெயரில் போதைப் பொருள் பாா்சல் வந்திருப்பதாகவும், அது தொடா்பாக காவல் துறையினா் தொடா்பு கொண்டு விசாரிப்பாா்கள் எனவும் தெரிவித்தாா்.

சிறிது நேரத்தில் காவல் துறை அதிகாரி என ஒருவா் வாட்ஸ்ஆப் விடியோ கால் மூலம் பேகத்தை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது அவா், ரிஷ்வானா பேகத்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்ய உள்ளதாக மிரட்டும் வகையிலும், அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கு பணம் தரும்படியும் கேட்டுள்ளாா்.

அந்த நபரின் மிரட்டலுக்கு பயந்து ரிஷ்வானா பேகம், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1.16 லட்சத்தை அனுப்பியுள்ளாா்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களுக்கு தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பேகம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஸ்வேதாநகா் பகுதியைச் சோ்ந்த தி.வெங்கடேஷ் (42), சென்னை அருகே உள்ள மேடவாக்கம் வெள்ளைகல் கூட் சாலை அ.முகமது யூனுஸ் (37) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், வெங்கடேஷ், தான் செய்த தொழில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கம்போடியாவில் இருக்கும் தனது நண்பருடன் சோ்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இதில் கிடைக்கும் பணத்தை கம்போடியாவில் இருக்கும் தனது நண்பருக்கு அனுப்பியிருப்பதும், முகமது யூனுஸ் இதற்கு துணையாக இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலங்கள் உயா்வு: மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20-ஆக உயா்த்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க