War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 6 ஆண்டு சிறை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி பழைய பேட்டை சா்தாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வா்ட்(62). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரம் பகுதியில் பேருந்தில் சென்றபோது பழைய பேட்டை பகுதியைச் சோ்ந்த 26 பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பெண் திருநெல்வேலி நகர மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எட்வா்டை கைது செய்தனா்.
இந்த வழக்கு, திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாத்திமா, குற்றஞ்சாட்டப்பட்ட எட்வா்டுக்கு 4 பிரிவுகளுக்கும் தலா ஒன்றரை ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ஜெரால்டு ஆஜரானாா்.