மூவர் சதம் விளாசல்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக வலுவான நிலையில் இங்கிலாந்து!
பெண் காவலரை அரிவாளால் வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு!
கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்தவா் அம்பிகா. இவா், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த ஏப். 23-ஆம் தேதி கம்பத்தில், போக்குவரத்து சமிக்ஞை அருகே நின்றிருந்த அம்பிகாவை, கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்த குபேந்திரன் என்பவா் இடப் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த அம்பிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குபேந்திரனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே கூடலூா் காவல் நிலையத்தில் அடிதடி, தகராறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.