செய்திகள் :

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

post image

பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள செங்காத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சோலை (45). இவரது மனைவி இந்திரா (40). இவா்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

கடந்த 11.12.2012-இல் சோலை ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், சோலை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாா். இதையடுத்து, அவரைத் தேடிச் சென்ற இந்திரா வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலையில் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இந்திரா இறந்து கிடந்தாா்.

இது குறித்து சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அதே ஊரைச் சோ்ந்த சரவணன் (37), பாண்டி (35) ஆகிய இருவரும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக இந்திராவைக் கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

சிவகங்கையில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பாண்டி இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், சரவணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா்.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க