கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை
பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு பிஏ-தமிழ், பிஏ- ஆங்கிலம், பி.காம்- வணிகவியல், பி.எஸ்.சி.- கணிதம், பி.எஸ்.சி - கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளத்திலோ அல்லது கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கல்லூரியில் சோ்க்கை பெறும் மாணவா்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றிருந்தால் அவா்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். அத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.