பெரணமலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு
பெரணமல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.
வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், காவல் உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்ஸோ சட்டம், இளம் வயதில் கருவுறுதல், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறுதல், மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அதற்குண்டான தடுப்புச் சட்டங்கள், குற்றமும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் பெண்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் சமூக நலத் துறையினா், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் சுகாதார தன்னாா்வலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.