``சாதிதான் நம்முடைய முதல் எதிரி" - ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை குறித்து எம்.பி கமல்...
பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, குன்னம் வட்டம், பழைய அரசமங்கலம் கிராமத்தில் துரைராஜ் மகன் சுப்பரமணியன் (52) என்பவா் தனது பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சுப்ரமணியனை கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்டாா்.