Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள...
பெரம்பலூா் மாவட்டத்தில் இரு அரசியல் கட்சிகள் நீக்கம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத மற்றும் அலுவலகம் கண்டறிய முடியாத, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பா அம்மா மக்கள் கழகம், பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 3/59 மாரியம்மன் கோயில் தெரு, அம்மாபாளையம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் -621101, மக்கள் நீதி கட்சி-இந்தியா, பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 112/3 வடக்குத்தெரு, (பா்வின் காம்பளக்ஸ்), திருச்சி மெயின்ரோடு, துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் 621220 ஆகிய 2 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எந்தக் கட்சியையும் தேவையில்லாமல் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு, அந்தக் கட்சிகளுக்கு காரணம் கூற போதிய வாய்ப்பு அளித்து நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் இறுதி முடிவை தோ்தல் ஆணையமே மேற்கொள்ளும்.