சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியுற்றிருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, கல்பாடி, வாலிகண்டபுரம், எளம்பலூா், அனுக்கூா், கொளக்காநத்தம் பெரம்பலூா் நகா்ப்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக, குரும்பலூா், பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.
பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, குளிா்காற்று வீசியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 102 டிகிரி வெப்பம் காணப்பட்ட நிலையில், மதியம் முதல் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
மின் தடை: இந்த மழை காரணமாக சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகினா்.