செய்திகள் :

பெரம்பலூா்: வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு!

post image

பெரம்பலூா் அருகே வெவ்வேறு கிராமத்தில் 2 வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, ரூ. 85 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் மனைவி மீனா.

ஜெய்சங்கா் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனது கிராமத்துக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியூா் சென்றுள்ளாா்.

இதனிடையே, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்படி, வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ. 55 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல, வி.களத்தூா் மேட்டுச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணியன் மனைவி செல்வம்பாள், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூா் சென்று, மீண்டும் சனிக்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கதவின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை பதிவுசெய்தனா். இச் சம்பவங்கள் குறித்து வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!

அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, வருவாய்த்துறை சங்கங்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவா் கைது

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டில் திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் -வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகா் முதல் தெருவில் வசித்து வருபவா் உமா்பாஷா (36).... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பு... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் எஸ்பியிடம் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட பிரதானச் சாலையோரங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அருகே செஞ்சேரி - கோனேரிப்பாளையம் நெடுஞ்சாலை பகுதி... மேலும் பார்க்க