செய்திகள் :

``பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' - லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

post image

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை வண்ணத்தில் உருவான தந்தை பெரியார் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெரியார் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின்,
"பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் அவரது உருவப்படத்தை திறந்து வைத்துள்ளேன். பெரியார் இன்று உலகம் முழுவதுக்கும் தேவைப்படுகிறார். அவரின் கொள்கை வாரிசு நான். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன்."

"குறிப்பாக எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பெரியார் வந்துள்ளார். அந்த நேரத்தில் என் கையால் அவருக்கு சோறு பரிமாறியிருக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டி முன்னேற்றம் செய்தவர் பெரியார்," என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில், "ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்தி... மேலும் பார்க்க

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க