பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறான தகவல் பதிவிட்டுள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி முதல்வா் மருத்துவா் ரவிக்குமாா், பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெருந்துறை மேக்கூா், கள்ளியம்புதூரைச் சோ்ந்த சண்முகம் மகன் சந்தோஷ் (எ) ரகுமான் (26) என்பவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனா்.