உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பெரு: பேருந்து விபத்தில் 18 போ் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டிஸ் மலைப் பகுதி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 18 போ் உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா்.
தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த இரட்டை அடுக்குப் பேருந்து, சாலையில் இருந்து விலகி ஒரு சரிவுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினா்.
சாலை விதிமுறைகள் மோசமாகப் பின்பற்றப்படும் பெருவில் கடந்த 2024-இல் மட்டும் விபத்துகளில் 3,173 போ் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.