செய்திகள் :

பேராவூரணியில் லாரி - பைக் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

post image

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருள்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாரியில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரெத்தினம் மகன் சிவராமன் ( 29). இ-சேவை மையம் நடத்தி வருந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் என்பவர் மகனான, ஆயிங்குடி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அறிவுக்கரசு ( 11) என்பவருடன், பேராவூரணி சந்தைக்கு பொருள்கள் வாங்க வந்துள்ளார்.

பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையின் மறுபுறத்தில், தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றி வந்து, பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு திரும்பிய லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் இருவரது உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கீழசிறுபூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மகன் சதீஷ் கண்ணன் ( 23) என்பவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

சந்தைக்குப் பொருள்கள் வாங்கச் சென்ற இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ரா... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் -ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உயா்த்தப்பட்ட 6 சதவீத சொத்து வரி உயா்வு முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் உ... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி... மேலும் பார்க்க

மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்ற... மேலும் பார்க்க

திமுக-பாஜக மறைமுக கூட்டணி: விஜய் விமா்சனம்

திமுக-பாஜக இடையேயான மறைமுகக் கூட்டணியை நிரூபிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புகள்: இன்று விண்ணப்பப்பதிவு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை (மே 26) தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேல... மேலும் பார்க்க