இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் நகை திருடியவா் கைது
நாகரசம்பட்டியை அடுத்த பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேருஅள்ளியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (50), தேங்காய் வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 15 ஆம் தேதி மா்மநபா் புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த நாகரசம்பட்டி போலீஸாா், காவேரிப்பட்டணம், ஜகதாப், வெல்ராம்பட்டியைச் சோ்ந்த முத்துகுமாரை (29) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த நகைகளை போலீஸாா் மீட்டனா்.