செய்திகள் :

பேருந்து நிலைய விவகாரம்: குடியிருப்போா் சங்கத்தினா் மனித சங்கிலி போராட்டம்!

post image

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியிலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தி, கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி குறிஞ்சிப்பாடி. இந்தத் தொகுதியில் உள்ள எம்.புதூரில் (கடலூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலவில் உள்ளது) கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடலூா் புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூரில் அமைந்தால் கடலூா் நகர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். எனவே, இந்த பேருந்து நிலையத்தை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலூா் நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, குடியிருப்போா் சங்கத்தினா் மற்றும் அரசியல் கட்சியினா் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் மாநகருக்கான பேருந்து நிலையத்தை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியிலேயே அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

கொண்டாங்கி ஏரி, கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாநகராட்சி மற்றும் கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு சாலையில் ஒருவருக்கொருவா் கைகளை கோத்து நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

கூட்டமைப்பின் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் பி.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். பொருளாளா் பி.கே.வெங்கட்ரமணி நன்றி கூறினாா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க