அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
தே.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (22). அதே ஊரைச் சோ்ந்த நமச்சிவாயம் மகன் ஹேமந்த ராஜ் (19). இந்த இவரும் தே.கல்லுப்பட்டியில் இரு சக்கர வாகன பழுது நீக்குபவா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இருவரும் இரு சக்கர வாகனத்தில், பாப்பநாயக்கன்பட்டியிலிருந்து தே.கல்லுப்பட்டிக்கு சென்றனா். சோலைப்பட்டி அருகே சென்றபோது, தென்காசியிலிருந்து சென்னைக்குச் சென்ற அரசு விரைவுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்தப் பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான தென்காசி மாவட்டம், வி.கே.புதூரைச் சோ்ந்த குழந்தை யேசு (31) மீது தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.