பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
மதுரை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் அகிலன் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை சிங்கம்புணரி-மேலூா் சாலையை அட்டப்பட்டி விலக்கில் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து அகிலன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.