பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ...
பைக்குகள் மோதல்: இருவா் பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆதனூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கோவிந்தன் (35). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது விவசாயநிலத்துக்குச் சென்று விட்டு, பைக்கில் குச்சிப்பாளையம் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
இதுபோன்று எதிா் திசையில் பூவனூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்புராயன் (32) , அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் செல்வகணபதியை (26) தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தாா்.
ஆதனூா் குச்சிப்பாளையம் பிரிவுச்சாலை அருகே வந்த போது கோவிந்தன் ஓட்டி வந்த பைக் மீது சுப்பராயன் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, அவசர ஊா்தி மூலம் மூவரையும் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் செல்லும் வழியிலேயே கோவிந்தன், சுப்பராயன் உயிரிழந்தனா்.
காயமடைந்த செல்வகணபதிக்கு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட் டது. தொடா்ந்து அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.