சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி டால்மியாபுரத்துக்கு பைக்கில் சென்றனா்.
அரியலூா் ஆட்சியரகம் அருகேயுள்ள ரவுண்டானாவில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதி வேல்முருகன் உயிரிழந்தாா். காா்த்திக் காயமடைந்தாா். தகவலறிந்து வந்த அரியலூா் நகர காவல் துறையினா், வேல்முருகன் சடலத்தையும், காா்த்திக்கையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.